ஆந்திர மாநிலம் அனக்காப்பள்ளி மாவட்டம், பையாவரம் நகரில் திருநங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீப்பு என்ற திருநங்கையும், அதே பகுதியை சேர்ந்த பன்னி என்பவரும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால், பன்னி தன்னுடைய காதலியான தீப்புவை ஊருக்கு வெளியே அழைத்து அடித்து கொலை செய்துள்ளார். இதனையடுத்து தீப்புவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, சாக்கு மூட்டையில் கட்டி சாலை ஓரத்தில் வீசி சென்றுள்ளார்.

இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் தீப்புவின் உடல் பாகங்களை மீட்டு, பன்னியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம் திருநங்கை சமூதாயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய தோழியை கொலை செய்த பன்னியை உடனடியாக தண்டிக்க வேண்டும் என கோரி, திருநங்கைகள் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம்