
ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலக காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் காதலர்கள் தங்களது காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக உள்ளது. வாழ்த்து அட்டைகள், மலர்கள், இனிப்புகள் போன்றவற்றை இந்த நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சாதியிழிவு ஒழிந்த சமநிலைச் சமூகத்தைக் கொணர, பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல்தான் இவ்வுலகத் தலைமையின்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பைச் செழிக்கச் செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம்.
— Kamal Haasan (@ikamalhaasan) February 14, 2023
அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, சாதியழிவு ஒழிந்த சமநிலை சமூகத்தை கொணர பெருங்கருவியாய் இருப்பது காதல். காதல் தான் இந்த உலகில் தலை இன்பம் என்பான் பாரதி. உலகளாவிய அன்பை செழிக்க செய்ய நாமும் கொண்டாடுவோம் காதலர் தினம் என அவர் பதிவிட்டுள்ளார்.