மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் ஜோடிக்கு இடையே ஏதோ சில பிரச்சனைகள் இருந்துள்ளது. இதனால் காதலன் தன் காதலியிடம் பேசாமல் இருந்த நிலையில் காதலி  தன்னுடைய சகோதரன் மற்றும் ஆண் நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு தன் காதலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த சென்றுள்ளார். அவர்கள் காதலனிடம் எதற்காக பேசாமல் இருக்கிறியாய் என்று கேட்டபோது திடீரென தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த அந்த பெண்ணின் சகோதரர் கோபத்தில் அந்த வாலிபரை கத்தியால் குத்த காதலியும் உடன் சேர்ந்தார். இதில் அந்த வாலிபர் நிலைகுலைந்து சாய்ந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.