சீன நாட்டைச் சேர்ந்தவர் சாவ். இவருக்கு தற்போது 59 வயது ஆகும் நிலையில் உடல் உறுப்புகள் அழுகி உயிரிழந்து விட்டார். அதாவது இவர் ஜிங் என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். இதனால் ஜிங்  மிகவும் ஆத்திரமடைந்த நிலையில் ஒரு கட்டத்தில் தன்னுடைய காதலனின் உள்ளாடையில் விஷம் தடவ ஆரம்பித்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் தன்னுடைய காதலன் உள்ளாடையில் அவர் விஷம் தடவிய நிலையில் உடல் உறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக அழுக ஆரம்பித்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்து விட்டார். இந்த வழக்கில் ஜிங் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை எதிர்த்து ஜிம் மேல்முறையீடு செய்த நிலையில் அவருடைய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.