
உத்திரபிரதேசம் மாநிலத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பரேலியைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் அவருடன் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளார்.
கடந்த 9-ம் தேதி சிறுமி வீட்டை விட்டு ஓடிய நிலையில் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் உத்தர பிரதேச மாநில காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிய போது தமிழ்நாட்டில் இருப்பது தெரியவந்தது.
இங்கிருந்து அந்த சிறுமியை ரயில் மூலமாக பரேலிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது தன்னை அழைத்து சென்ற காவல் அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சிறுமி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.
மீட்கப்பட்ட அந்த சிறுமியை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த போது சிறுமி இந்த தகவலை கூறிய நிலையில் தற்போது உயர் அதிகாரிகள் சிறுமி புகார் கூறிய அதிகாரி மீது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.