
டெல்லியில் கடந்த திங்கள் கிழமை மாலை 8 வயது சிறுமி காணாமல் போய் உள்ளார். அவரை பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்று போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரித்ததில் 19 வயது இளைஞர் சிறுமியை கடத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது.
சிறுமியின் வீட்டிற்கு அருகே வசித்து வரும் அந்த இளைஞர் சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத கட்டிடம் ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து இரண்டு முறை சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
ஆனால் சிறுமி தொடர்ந்து உதவிக்கு ஆட்களை அழைத்து கத்திக் கொண்டிருந்ததால் கொலை செய்து விட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.