
ஜம்மு காஷ்மீர் குல்காம் மாவட்டத்தை சேர்ந்த ஜாவித் அகமது வாணி என்னும் ராணுவ வீரர் லடாக் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு வந்த ஜாவித் வீட்டிலிருந்து கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. திடீரென காணாமல் போன அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது கார் ரத்த கரையுடன் ஒரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனால் உறவினர்கள் காவல்துறையில் புகார் அளிக்க ராணுவ வீரரை தேடும் பணி தீவிர படுத்தப்பட்டது. இந்நிலையில் ராணுவ வீரர் ஜாவித் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அதன் பிறகு அவரிடம் காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் காஷ்மீர் போலீசார் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.
#Missing Army jawan has been recovered by Kulgam Police. Joint #interrogation will start shortly after medical checkup. Further details shall follow: ADGP Kashmir@JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) August 3, 2023