கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ப்ரொபஷனல் பாடி பில்டர் சித்ரா புருஷோத்தம். இவர் தன்னுடைய திருமண நாளின் போது காஞ்சிபுரம் பட்டு புடவையுடன் நகைகளை அணிந்து கொண்டு தன்னுடைய தசைகளை தன்னம்பிக்கையுடன் காட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அந்த பெண் தன்னுடைய திருமண நாளின் போது காஞ்சிபுரம் பட்டு புடவையில் நகைகளை அணிந்து ஆண் போன்று மிகவும் கம்பீரமான உடற்கட்டுடன் காணப்படுகிறார். மேலும் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருவதோடு சித்ராவின் அழகு பாரம்பரியம் மற்றும் உடல் வலிமை போன்றவைகளையும் புகழ்ந்து வருகிறார்கள்.