
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா நேற்று நடைபெற்ற போது பிரபல தேர்தல் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் அதில் கலந்து கொண்டு பேசினார். அப்போது தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய் என்று அவர் கூறியதோடு அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக விஜய் வெற்றி பெறுவார் என்றும் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது,தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை விஜய் தான் என்று பீகார் காரன் தான் வந்து சொல்லனுமா.?
அவர் வாங்கிய காசுக்கு அவர் கூவ வேண்டும். தமிழக அரசியலில் ஊழல் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த நிலையில் அதனை பீகாரிலிருந்து வந்து தான் ஒருவர் சொல்ல வேண்டும் என்று கிடையாது. ஊழல் இருப்பது தெரிந்தும் எதற்காக இங்கு வேலை செய்ய வேண்டும். எங்கள் ஊரில் ஊழல் இருக்கிறது என்று தெரிந்தும் எதற்காக அவர் வந்தார். ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதற்காக வியூகம் வகுத்து கொடுத்தார். கேடுகெட்ட ஊழல்வாதி மற்றும் ஊழல் இருக்கிற மாநிலத்தில் எதற்காக வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். மேலும் கடந்த சட்டசபை தேர்தலில் பிரஷாந்த் கிஷோர் திமுகவுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.