தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய். இவருடைய கட்சியின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாடு நடைபெறுவதற்கு ஏராளமான விவசாயிகள் நிலம் கொடுத்த நிலையில் அவர்களுக்கு உரிய வாடகை கொடுத்தார். அதோடு நேற்று நிலம் கொடுத்த அனைத்து விவசாயிகளையும் சென்னை பணிகளில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அழைத்து விருந்து கொடுத்ததோடு சால்வை அணிவித்து தாம்பூல தட்டில் வேஷ்டி சேலை போன்றவற்றை பரிசாக வழங்கினார். அதன் பிறகு பந்தல் ஏற்பாட்டை கவனித்துக் கொண்டவருக்கு தங்க மோதிரத்தை பரிசாக வழங்கியதோடு விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளருக்கும் தங்க மோதிரம் ஒன்றினை பரிசாக விஜய் வழங்கினார்.

இந்நிலையில் மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளில் ஒருவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விஜய் மாநாடு நடைபெறுவதற்கு இடம் கொடுத்ததற்காக பணம் மட்டும் கொடுக்கவில்லை எனவும் பூமி பூஜை நடைபெறும் தினத்தில் ‌ காலை நேரத்தில் அழைத்து அனைவருக்கும் உணவு கொடுத்ததாகவும் கூறினார். அதோடு மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகவே உரிய பணத்தை செட்டில் செய்து விட்டதாகவும் கூறியுள்ளார். அதன்பிறகு அந்த மாநாடு நடந்த இடத்தில் 100 அடி உயரத்தில் நிரந்தர கொடி கம்பம் ஒன்று நடப்பட்டது. இந்த கொடிக்கம்பத்தில் lightning arrester வைத்துக் கொடுத்துள்ளார். மேலும் இதன் மூலம் 500 மீட்டர் சுற்றளவிற்கு இடி மின்னல் தாக்காது. இதன் மூலம் விவசாயிகளின் நலனை பாதுகாத்துள்ளார் விஜய் என்று அவர் பெருமிதமாக கூறியுள்ளார். ‌