
இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 14 வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலால் தேவாலய வளாகத்தில் தஞ்சம் புகுந்த பலர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தில் போர் தொடங்கியதால் காசா பகுதியை சேர்ந்த பலர் இந்த தேவாலயத்தில் தஞ்சம் புகுந்ததாகவும் அதன் அருகே உள்ள இலக்கை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தாக்குதல் பற்றி இஸ்ரேல் தரப்பிலிருந்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.