
காசா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதல்களை அடுத்து காசா பகுதியில் நிலைமை மிகவும் பரிதாபமாக மாறி உள்ளது. இந்த தாக்குதல்களில் 2055 குழந்தைகள் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா மருத்துவமனைகளில் உள்ள இன்குபேட்டர்களில் உள்ள குழந்தைகள் குறித்து அங்குள்ள மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இன்குபேட்டர்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால் பல குழந்தைகள் இறக்க நேரிடும் எனவும் இது கொடுமையான தருணம் எனவும் வருத்தம் தெரிவித்துள்ளனர்