விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக தாரகை கத்பர்ட் இன்று  முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கும் விதமாக இன்றைக்கு என்னை சட்டமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்துள்ளார்கள் மக்கள்.

முன்னாள் எம்எல்ஏவுக்கு காங்கிரஸில் பல பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக ஒரு பெண் தான் இருந்தார் என்று கூறினார். மேலும்  காங்கிரஸ் கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றும் கூறியுள்ளார்.