
காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த கவுரவ் வல்லப் அக்கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார். திசையின்றி பயணிக்கும் காங்கிரஸில் செயல்பட தனக்கு விருப்பமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், சனாதனத்திற்கு எதிரான முழக்கங்களை எழுப்பவோ, நாட்டை வளப்படுத்துபவர்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்றோ, தன்னால் கூற முடியாது என்றும் கூறியுள்ளார்