ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் பிரகலாத் மேகர் (41) என்பவர் வசித்து வருகிறார். இவர் தாந்திரீகர் என்று கூறிக்கொண்டு அந்தப் பகுதியில் வலம் வந்த நிலையில் தற்போது போலி சாமியார் என்பது தெரியவந்த நிலையில் இவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அதாவது இவர் ஒரு சிறுமியை கடத்தி மூன்று நாட்களுக்கு மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் குடும்பத்தினரிடம் இவர் துஷ்ட சக்திகள் இருப்பதாகவும், கஷ்டம் நீங்கி கடன்களை நீக்க உறுதி அளிப்பது ஆகவும் கூறி பூஜை செய்ய சிறுமியை அழைத்து சென்றுள்ளார். கடந்த மாதம் 22ஆம் தேதி தன்னுடைய ஆசிரமத்திற்கு அவர் சிறுமியை அழைத்து சென்ற நிலையில் மறுநாள் சிறுமியும் அந்த சாமியாரும் காணாமல் போய்விட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்த நிலையில் கடந்த 26 ஆம் தேதி அவர்கள் சிறுமியை மீட்டனர். அப்போதுதான் மூன்று நாட்களாக சிறுமியை அவர் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரிய வந்ததை தொடர்ந்து மந்திரவாதியை போலீசார் கைது செய்தார். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.