
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் மலையாள சினிமாவிலும் நடித்துவரும் நிலையில் நடிகர் கௌதம் கார்த்திகை காதலித்த திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் ஒரு வீடியோவுக்கு தற்போது மஞ்சிமா மோகன் லைக் செய்துள்ளார். அதாவது ஒரு வாலிபர் ஒரு நபரிடம் பேட்டி எடுக்கிறார். அவர் கலெக்டர் அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார். அவர் RI பதவியில் இருந்த நிலையில் பதவி உயர்வு பற்றி தற்போது கலெக்டர் அலுவலகத்தில் வேலை பார்க்கிறார். அவர் சிறு வயது முதல் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து கூறியுள்ளார். அதாவது சிறுவயதில் அவரின் தந்தை இறந்துவிட்ட நிலையில் 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரனுடன் வளர்ந்துள்ளார்.
மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் என்பதால் அவருடைய தாய் கூலி வேலை மற்றும் விவசாய வேலைகள் செய்து காப்பாற்றியுள்ளார். அவரும் படிக்கும்போது மிகவும் கஷ்டப்பட்டு நிறைய வேலைகள் செய்துள்ளார். அதன் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய நிலையில் அதில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு தகுதியானார். அதன் பிறகு தன் கடின உழைப்பால் அடுத்தடுத்து பதவி உயர்வுகள் பெற்று வருகிறார். மேலும் மிகவும் கஷ்டப்பட்டு படித்து தற்போது ஒரு நல்ல பதவியில் அவர் வேலை பார்ப்பதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் நடிகை மஞ்சிமா மோகன் ஃபயர் கமெண்ட்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது மிகவும் பைரலாகி வருகிறது.
View this post on Instagram