சமூக ஊடகங்களில் தற்போது ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த விடியோவானது தந்தையின்  தியாகத்தையும், குழந்தைகள் பெற்றோர்களுக்கு ஏற்படுத்தும் அழுத்தத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், ஒரு சிறுவன் அப்பாவின் உதவியால் புதிய iPhone வாங்கி மகிழ்ச்சியோடு இருக்கிறார். ஆனால், அவருக்கு அருகில் நிற்கும் அவரது தந்தை, மனதளவில் பாரத்துடன் நிற்கிறார். கைநிறைய பணம் செலுத்தும் போது அவரது முகத்தில் கவலையின் வெளிப்பாடு தெளிவாக தெரிகிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதாவது இன்றைய இளைஞர்களுக்கு iPhone வாங்கும் நோய் வந்துவிட்டது. வீட்டின் நிலையைப் பார்க்க மாட்டார்கள்.  என்றும் ஒரு பயனர், “நான் 15 வருடமாக சம்பாதித்து வருகிறேன். ஆனால் ஒரு iPhone வாங்க வேண்டும் என்று ஒருபோதும் தோன்றவில்லை. ஒரு மாத சம்பளத்திற்குச் சமமான செலவாகும் இந்த மொபைல் உண்மையில் தேவையா?” என்று கூறியுள்ளார். மற்றொருவர், “இந்த சமூகத்தில் அந்தஸ்தைக் காட்டவே மக்கள் தேவையில்லாத செலவுகளைச் செய்கிறார்கள். இது ஒரு தனிநபரின் பிரச்சனையல்ல, சமுதாயம் எந்தத் திசையில் போய்க்கொண்டிருக்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “இந்தக் குழந்தை இந்த iPhone-ஐ வைத்து ரீல் எடுத்து நேரத்தை வீணடிக்கும்” என சிலர் விமர்சித்துள்ளனர். பலரும், “ஒரு தந்தை தன் மகனின் கனவுகளை நிறைவேற்ற எந்த அளவுக்காவது செல்வார்” என்று கூறியுள்ளார்கள்.