
தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே கவரப்பேட்டை பகுதியில் நேற்று இரவு நடந்த ரயில் விபத்தில் காயமடைந்த பயணிகளை துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை. மீட்பு பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக கண்காணித்து வருவதாகவும், காயமடைந்த பயணிகள் விரைவில் தங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் இந்நிகழ்வை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது, தொடர்ந்து நடைபெறும் ரயில் விபத்துகளைத் தடுக்க மத்திய அரசு மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும், ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.