தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை ஆக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவருக்கு சமீபத்தில் ஆண்டனி தட்டில் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் பள்ளி பருவத்தில் இருந்தே கடந்த 15 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் தற்போது பெற்றோர் சம்பந்தத்துடன் கோவாவில் இந்து முறைப்படி காலையில் திருமணம் செய்த நிலையில் அதே நாள் மாலையில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நிலையில் தற்போது ஹிந்தியில் பேபி ஜான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.

இந்த படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் தற்போது ஒரு பட  நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வந்தார். அப்போது கழுத்தில் மஞ்சள் கயிறுடன் மாடர்ன் டிரஸ்ஸில் வந்தார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. முன்னதாக நடிகை நயன்தாராவும் திருமணமான புதிதில் மஞ்சள் கயிறுடன் மாடர்ன் டிரஸ்ஸில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Snehkumar Zala (@snehzala)