சண்டிகர் மாநிலத்தில் உள்ள ஒரு கிழமை நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கின் போது மனைவிக்கு மாதம் 4,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அவரது மனைவி வேறொருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்ததால் ஜீவனாம்சம் வழங்க முடியாது எனக் கூறிய கணவன் அந்த தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் ஒரு பெண்ணுக்கு கணவன் ஜீவனாம்சம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை எனக்கூறி தீர்ப்பு வழங்கியது. மேலும் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பையும் ரத்து செய்த நீதிமன்றம் உத்தரவிட்டது.