
தமிழகத்தில் சமீப காலமாக சட்டவிரோதமான செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன . குறிப்பாக கள்ளச்சாராயம், மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தடையை மீறி பலரும் விற்பனை செய்கின்றனர். தடை செய்யப்பட்ட முறையில் தயார் செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை குறித்து பலரும் உயிரிழக்கும் சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில் காவல் கண்காணிப்பை தாண்டி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன.
இதனை தடுப்பதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை புதிய அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் குறித்த விவரங்கள் தெரிந்தால் புகார் தெரிவிப்பதற்கு whatsapp எண் வெளியிடப்பட்டுள்ளது. எனவே 7358154100 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கும் நபரின் விவரம் ரகசியம் காக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.