கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து ஏற்கனவே 29 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் தற்போது பலி எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை  இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தினகரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜயா, தாமோதரன், கோவிந்தராஜ் உள்ளிட்ட நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதே போல் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.