
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 39ஆவது அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 ஆண்டுகளுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் மதிமுக சார்பில் வழங்கப்படும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும் பெற்றோரை இழந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் கல்வி செலவை அதிமுகவே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார் . இதற்கு முன்னதாக சிவி சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோருடன் எடப்பாடி பழனிச்சாமி கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்து சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.