கன்னியாகுமரி மாவட்டம் முள்ளிகாடு பகுதி சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சிவக்குமார் கட்டிட வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஷிஜா. இந்த தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டு சிவக்குமார் தனது வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கினார்.

தனது கணவர் தற்கொலை செய்து கொண்டதாக ஷீஜா நாடகமாடினார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் ஷிஜாவுக்கும் எழில் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்தனர். இதனை அறிந்து சிவகுமார் தனது மனைவியை கண்டித்துள்ளார்.

இதனால் ஷிஜா எழிலுடன் சேர்ந்து சிவக்குமாரின் கழுத்தை நெரித்து கொலை செய்து அவர் தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடியது தெரியவந்தது. கடந்த 8 வருடங்களாக அவர்கள் தலைமறைவாக இருந்தனர். நேற்று முன்தினம் ஊருக்கு வந்த ஷீஜா எழில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.