
ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர் பகுதியில் ஜேஐஐடி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படித்து வரும் 5 மாணவ மாணவிகள் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் கல்லூரி நுழைவு வாயிலின் அருகே நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி பாதிக்கப்பட்ட 5 மாணவிகளும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரில் 3 மர்ம நபர்கள் மாணவிகளின் ஆடைகளை கிழித்ததோடு அவர்களின் அந்தரங்க உறுப்பை தாக்கி பாலியல் ரீதியாக மானபங்கம் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடக்கும் போது அருகில் காவல்துறை பணியாளர்கள் இருந்த போதிலும் அவர்கள் தங்களுக்கு உதவி செய்யவில்லை எனவும் நீங்கள் இப்படி குட்டையான பாவடை அணிந்ததால்தான் இது போன்ற சம்பவங்கள் நடந்தது என்று திட்டியதாகவும் மாணவிகள் கூறியுள்ளனர்.
மாணவிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மிகவும் கொச்சையான வார்த்தைகளால் பேசி திட்டிய நிலையில் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். மாணவிகளின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் இந்த கல்லூரியில் படித்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த பிகருதி என்ற மாணவி உயிரிழந்த நிலையில் இதே கல்லூரியில் படித்து வரும் மற்றொரு நேபாள மாணவியான பிரிஷா என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். மாணவிகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டம் நடத்திய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது