மலையாள சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக இருந்தவர் விஷ்ணு பிரசாத். இவர் கல்லீரல் பாதிப்பால் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஹாஸ்பிட்டலில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் தமிழ் சினிமாவில் காசி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் மலையாளத்தில் ரன்வே, மாம்பழ காலம், லயன், பென் ஜான்சன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருடைய மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவருக்கு கல்லீரல் அறுவை சிகிச்சை நடைபெற இருந்த நிலையில் 30 லட்ச ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்பட்டது. அவருடைய மகள் கல்லீரல் தானம் செய்ய முன்வந்த நிலையில் பணத்தை ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.