பிரபல இயக்குனர் கங்கை அமரனின் மகனும் நடிகருமான பிரேம்ஜியின் திருமணம் இன்று பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவிலில் நடைபெற்றது. நேற்று அவருக்கு இந்து என்ற பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இன்று எளிமையாக திருமணம் திருத்தணி கோவிலில் வைத்து நடைபெற்று முடிந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டார், நெருங்கிய உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சி கங்கை அமரன் மற்றும் அவருடைய மூத்த மகனும் பிரபல இயக்குனருமான வெங்கட் பிரபுவின் தலைமையில் நடைபெற்று முடிந்தது. தாலி கட்டிய கையோடு மணமகளுக்கு நடிகர் பிரேம்ஜி கன்னத்தில் முத்தம் கொடுத்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும்  பலரும் நடிகர் பிரேம்ஜிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.