கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் நெடுஞ்சாலை நகர் சுப்பராயர் தெருவில் தனசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் கப்பல் இன்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் சென்னை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் புதன்கிழமை கடலூரில் வைத்து திருமணம் நடக்க இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். நேற்று முன்தினம் பிரசாத் சாப்பிட்டுவிட்டு மாடியில் இருக்கும் வரை தூங்குவதற்காக சென்றார்.

காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் கீழே வரவில்லை. இதனால் குடும்பத்தினர் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது பிரசாத் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரசாத்தின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.