
தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது. இந்த நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வெளியிட்டார். இந்நிலையில் கலைஞரின் உருவம் பொறித்த நாணயத்தில் ஹிந்தி எழுத்து இருக்கிறது. இதனை அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது ஹிந்தி எழுத்து பொறித்தது தொடர்பாக இன்று ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் ஏற்கனவே அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் போன்ற தலைவர்களுக்கு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது. அந்த நாணயங்களிலும் ஹிந்தியில் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் அதே போன்று தான் தற்போது கலைஞர் நாணயத்திலும் ஹிந்தி எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.