தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தங்களது கழகத்தின் எதிரிகள் ஒன்று மத்தியில் ஆளும் பாஜக மற்றொன்று தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் திமுக என வெளிப்படையாக சொல்லாமல் சூசகமாக விஜய் அவர்கள் மாநாட்டில் சொல்லிச் சென்று இருப்பார். இதையடுத்து திமுகவினர் பலரும் விஜய் அவர்களுக்கு எதிராக தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அதற்கு மறு பதிலளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளும் பல வீடியோக்கள் ஆடியோக்கள் புகைப்படங்கள் மீம்ஸ்கள் என திமுகவிற்கு எதிராக தங்களது பதிவுகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்

திமுகவின் தொண்டர் ஒருவர் சர்ச்சைக்குரிய விதமாக பேசிய வீடியோவை இணையத்தில் வெளியிட்டு அதை வைரலாக்கி உள்ளனர். அதில் எங்களை பொறுத்தவரையில் கலைஞர் அவர்களது குடும்பம் தான் இந்த நாட்டை ஆள வேண்டும். அதுதான் எங்களது தார்மீக விருப்பமும் கூட இதற்காக எங்களை அடிமைகள் என்று சொன்னாலும் கொத்தடிமைகள் என்று கூறினாலும் கவலை இல்லை. நாங்கள் அடிமைகள் தான் கலைஞர் வீட்டின் கொத்தடிமைகள் தான். அதில் எங்களுக்கு எந்தவித அவமானமும் இல்லை என்று கூறியிருப்பார் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.