கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3,100 கோடி செலவில் 1 லட்சம் வீடுகள் கட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில் வீடுகள் அனைத்துமே 360 சதுர அடி சமையலறையோடு இருக்க வேண்டும். 300 சதுர அடி RCC கூரையோடு, மீதமிருக்கும் 60 சதுர அடிக்கு தீப்பிடிக்காத கூரையாக அமைக்கப்பட வேண்டும்.

வீட்டின் சுவர்கள் செங்கல், இன்டர்லாக் பிரிக், ஏஏசி பிளாக் உள்ளிட்டவற்றால் கட்டப்பட வேண்டும். ஒரு வீட்டுக்கான தொகை அனைத்தையும் சேர்த்து ரூ.3.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடிசை வீடுகள் சர்வே விவரங்களை மே 31ம் தேதிக்குள் ஊரக வளர்ச்சித்துறை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.