தமிழகத்தில் பெங்கல் புயல் இன்று உருவாகும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த புயல் நாளை மறுநாள் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை மறுநாள் ரெட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது தமிழக வெற்றி கழகத்தினர் மழை காரணமாக கர்ப்பிணி பெண்களின் வசதிக்காக புதிய வாகன சேவையை தொடங்கியுள்ளனர். அதாவது தொடர் மழையின் காரணமாக கர்ப்பிணி பெண்கள் எந்த விதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதற்காக தமிழக வெற்றி கழகத்தினர் இலவச கார் சேவையை தொடங்கியுள்ளனர். இதனை தமிழக வெற்றிக் கழகத்தினர் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.