
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ரோஷ்னி சௌகி பகுதியில் பழங்குடியினத்தைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வெள்ளிக்கிழமை-சனிக்கிழமை இரவில் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை அவர்கள் கூட்டு வன்கொடுமை செய்தது மட்டுமின்றி அந்தரங்க உறுப்பில் இரும்புராடை நுழைத்ததால் அந்த பெண்ணின் கர்ப்பப்பை வெளியே வந்தது.
இந்நிலையில் அந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் சீமா சூட்டின் வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பெண்ணின் குடல்கள் 176 செ.மீ. வரை வெளியே வந்திருந்ததாகவும், அவரது கருப்பை மற்றும் அந்தரங்கப் பகுதிகள் பலத்த காயமடைந்திருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், கடுமையான தாக்குதலால் அதிக இரத்தப்போக்கு மற்றும் அதிர்ச்சி ஏற்பட்டதே அவருடைய மரணத்துக்கான முக்கிய காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது. இது டெல்லி நிர்பயா சம்பவத்தையும் மிஞ்சும் அளவுக்கு கொடூரமாக இருந்தது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த அந்த இரவில், அந்தப் பெண் ஒரு திருமண விழாவுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து திரும்பும் வழியில், ஹரி மற்றும் சுனில் என்ற இரு இளைஞர்கள், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர். இது பற்றி போலீசார் கூறுகையில், மூவரும் அன்றிரவு மதுபோதையில் இருந்ததாகவும், குற்றம் முடிந்த பிறகு அவரை அப்படியே விட்டுவிட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை ஹரியின் தாயாரால் அந்தப் பெண் கண்டுபிடிக்கப்பட்டதும், உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டதோடு, போலீசார் ஹரி மற்றும் சுனிலை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறும் நிலையில் இந்த சம்பவம் அந்த மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அந்த கொடூர குற்றவாளிகளின் புகைப்படத்தையும் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.