
புதிய கர்நாடக அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக முதலமைச்சர் மே 18ஆம் தேதி பதவியேற்கிறார். அன்றைய தினம் அமைச்சரவை அமைச்சர்களும் பதவியேற்பார்கள். கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டி.கே.சிவக்குமார், முதல்வர் முடிவை கட்சியின் மேலிடத்திற்கு விட்டுவிட்டேன் என அறிவித்துள்ளார்.
தொடர்ந்து, தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவேன், சித்தராமையாவுக்கு வாழ்த்துகள் எனவும் அந்த பேட்டியில் குறிப்பிட்டார். இதையடுத்து, கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.