கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து மூன்றாவது நாளாக வயநாட்டில் மீட்பு பணிகள் தொடரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 252 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இடுக்கி மாவட்டத்தில் கனமழை புரட்டி எடுக்கும் நிலையில் ஒரு பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது கார் டிரைவர் ஒருவர் ஆபத்தான பயணம் மேற்கொண்டார்.

அது தொடர்பான வீடியோ வைரலாகி வருகின்றது. பிரசவ வலியுடன் இருந்த கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக காரில் ஆபத்தான முறையில் அவர் பாலத்தை கடந்துள்ளார். வெள்ளம் கரை புரண்டு ஓடும் பாலத்தில் துணிச்சலுடன் சென்று தனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்த அவருக்கு பலரும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.