
காக்கிநாடா துறைமுகத்திலிருந்து சட்டவிரோதமாக கப்பலில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் களத்தில் இறங்கிய நிலையில் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்துள்ளார். அதோடு ரேஷன் அரிசி கடத்தி வந்த கப்பலையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் இருக்கும் ஜனசேனா மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஆந்திராவில் ஆட்சியில் இருக்கும் நிலையில் தற்போது மத்திய அரசுக்கு சொந்தமான துறைமுக கப்பலை பவன் கல்யாண் பறிமுதல் செய்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அரசியலமைப்பில் ‘துணை முதல்வர்’ என்ற பதவிக்கு தனிப்பட்ட அதிகாரங்கள் குறிப்பிடப்படவில்லை. அவர், அமைச்சரவை உறுப்பினராக செயல்பட்டு, முதல்வரின் ஆலோசனையின் பேரில் ஒதுக்கப்பட்ட துறைகளை நிர்வகிப்பார். அரசியலமைப்பின் பிரிவு 163 மற்றும் 164 இன் படி, மாநில ஆளுநர், முதல்வரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்களை நியமிப்பார்.
கப்பல் போக்குவரத்து துறை என்பது மத்திய அரசின் கீழ் செயல்படும் துறை. இந்த துறை தொடர்பான விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் சட்டங்களை உருவாக்குதல் மற்றும் நிர்வகிப்பது மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் பொறுப்பாகும்.
எனவே, ஒரு மாநிலத்தின் துணை முதல்வருக்கு, கப்பல் போக்குவரத்து துறையில் அதிகாரம் செலுத்தி, ஒரு கப்பலை ‘சீஸ்’ (அதாவது, கைப்பற்றுதல் அல்லது தடுத்து நிறுத்துதல்) செய்யும் அதிகாரம் இல்லை. இது மத்திய அரசின் அதிகார வரம்பிற்குள் வரும் செயலாகும்.
கப்பலை சீஸ் பண்ணுங்க 🔥🔥🔥
எங்கிருந்து பிரஷர் வந்தாலும் நான் பாத்துக்குறேன் 👍
ரேஷன் அரிசி கடத்திய கப்பலை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட ஆந்திரா துணை முதல்வர் @PawanKalyan 🔥🔥🔥 pic.twitter.com/FXo8qDJu4W— Kshatriyan (@Tnagainstnaxals) November 29, 2024