விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு அதன் பிறகு அறிமுகமானவர்தான் சிவாங்கி. இவர் மெல்லிசை பாடல்களை தன்னுடைய காந்த குரல்களால் பாடி ரசிகர்களை தான் வசப்படுத்தி வைத்திருக்கிறார். இந்த நிகழ்ச்சி மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் பங்கு பெற்று மிகப் பிரபலமானார் சிவாங்கி. சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படத்தில் கதாநாயகியின்  தோழியாக நடித்திருப்பார். இந்த நிலையில் பாடல், நிகழ்ச்சிகள் எனப்படு பிசியாக சிவாங்கி இருந்தாலும் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களை பிக் பாஸ் கன்பஷன் ரூமிற்கு அழைப்பது போல வீடியோ காட்சி ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல போகிறார் என்ற ஆசையாக இருந்த போது வித்யாசாகர் மகனுடன் இணைந்து ஆல்பம் பாடல் ஒன்றை வெளியிட்டார்.  இதை பார்க்கும்  பொழுது இருவரும் நெருக்கமாக நடனம் ஆடுகிறார்கள். இவர்களின் பாடல்களை தொடங்குவதற்கு ஒரு ப்ரோமோ பிக் பாஸை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெளிவாக இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sivaangi Krishnakumar (@sivaangi.krish)