மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வறுமையில் வாடிய மாணவிக்கு உதவி செய்துள்ளார். 12 ஆம் வகுப்பில் 562 மதிப்பெண்கள் பெற்று குடும்ப சூழ்நிலையால் படிப்பை தொடர முடியாமல் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சோபனா என்ற மாணவி சிரமப்பட்டார். அந்த மாணவியின் உயர்கல்விக்கு தேவையான உதவிகளை கமல்ஹாசன் செய்துள்ளார்.

சோபனாவின் கனவை நிறைவேற்ற குடிமைப்பணி தேர்வுகளுக்கு தயாராவதற்கான ஏற்பாடுகளையும் கமல்ஹாசன் செய்து கொடுத்துள்ளார். மீனவ குடும்பத்தில் பிறந்த சோபனா வறுமை காரணமாக வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு இருந்தார். தற்போது கமல்ஹாசன் உதவி செய்ததால் மாணவியும் அவரது குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.