
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிக்கு ஆண்டுதோறும் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. 2024 – 2025ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் மே 20 முதல் 25 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக இத்தேர்வுகள் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த சந்தேகங்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.