
தமிழகத்தில் கோடைவெயில் தொடங்கிய நிலையில் ஆரம்பத்திலிருந்தே வாட்டி வதைத்து வந்தது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கோடை வெயிலுக்கு இதமளிக்கும் விதமாக மழை வெளுத்து வாங்கியது. இவ்வாறு அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் தெரியாமல் கோடை மழையில் குளிர் காய்ந்த தமிழகத்திற்கு தற்போது அதிர்ச்சி தகவலை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தின் பல பகுதிகளில் மே 10-மே 14 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 4 டிகிரி செல்சியஸ் வரை உயரும், வரும் 13,14 தேதிகளில் வெயில் உச்சம் தொடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெப்ப அழுத்தம் காரணமாக அசௌகரிய நிலை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.