
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் இடைவிடாது லேசான மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கோவை மாவட்டத்தில் மிக கனமழை பெய்து வருவதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி வால்பாறையில் ஜூன் 16 இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அடுத்தடுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதுகாப்புடன் செல்வது நல்லது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.