
தொடர் கனமழை காரணமாக, இன்று தமிழகத்தின் 12 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் சில இடங்களில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளான தி.மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளின்படி, இந்த கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கக்கூடும் என்பதால், மாவட்ட ஆட்சியர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறைகளை அறிவித்துள்ளனர். குறிப்பாக வடகிழக்கு பருவமழையின் தாக்கம் காரணமாக இந்த பகுதிகளில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது.