தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி உட்பட 22 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 22 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழக அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கனமழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்து விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதன் பிறகு ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தையும் பணியில் ஈடுபடுத்து வேண்டும். மேலும் மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று இருக்கிறது.