
சீனாவில் சுற்றுலா பயணமாகச் சென்ற இந்தியர் ஒருவர், சாலையோரத்தில் உள்ள ஒரு சாதாரண முடி திருத்தக்காரரிடம் தலைமுடி வெட்டிக்கொண்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. @devang_sethi என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
ஆரம்பத்தில் அவருக்கு சந்தேகம் இருந்தாலும், முடிவில் அவரது முகத்தில் இருந்த மகிழ்ச்சி அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது 8 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளையும், 9 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது.
View this post on Instagram
வீடியோவில், தேவாங் சேத்தி சாலையோர முடிதிருத்தக்காரரை பார்த்ததும், AI உதவியுடன் “என் தலைமுடியை குட்டையாக வெட்டு” என்றதை சீன மொழியில் மொழிபெயர்த்து காட்டுகிறார். கடைக்காரர் உடனே புரிந்து கொண்டு அவரை நாற்காலியில் அமர்த்தி, திறமையாக தலைமுடியை வெட்ட ஆரம்பிக்கிறார்.
தேவாங் தொடர்ந்து, “இந்தியாவில் குறைந்தபட்சம் கண்ணாடி இருக்கும், ஆனால் இங்கே கண்ணாடியும் இல்லாமல் முடி வெட்டுகிறார்கள்” என நகைச்சுவையாகக் கூறுகிறார்.
முடி வெட்டும் வேலை முடிந்ததும் தேவாங் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவரது தலைமுடி அழகாக வெட்டப்பட்டதைப் பார்த்து, பலர் யூடியூப்பிலும் இன்ஸ்டாகிராமிலும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர். “இந்த சீன முடிதிருத்த நபர் உங்கள் வயதை 5 வருடம் குறைத்து வைத்தார் போல!” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு தனது யூடியூப் சேனலை துவக்கிய தேவாங் சேத்தி தற்போது 3 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டுள்ளார். உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டே வாழ்க்கை அனுபவங்களை பகிரும் அவருடைய இந்த சீன ஹேர்கட் வீடியோ, யூடியூப்பிலும் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது.