பீகாரில் கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 6 நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்ட மனோஜ் குமார் என்ற கோயில் பூசாரி கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். கண்கள் பிடுங்கி, பிறப்புறுப்பு துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

காணமல்போன அவரை போலீசார் தேடிவந்த நிலையில், சனிக்கிழமையன்று முட்புதரில் இறந்த நிலையில் கிடந்த அவரின் சடலத்தை கண்டுபிடித்தனர். இறந்தவர் பாஜகவின் முன்னாள் டிவிஷனல் தலைவர் அசோக் குமார் ஷா-வின் சகோதரர் ஆகும். கொலையாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.