மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உத்வட் கிராமத்தில் 15 வயது சிறுவன் ஒருவன் தன் பெற்றோருடன் வசித்து வந்துள்ளான். இந்த சிறுவன் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளியில் கணித தேர்வு நடைபெற்ற நிலையில் மாணவன் செல்போனை பயன்படுத்தியுள்ளான்.

இதனை ஆசிரியர் பார்த்து செல்போன் மற்றும் விடைத்தாளை பறிமுதல் செய்ததோடு மற்றொரு விடைத்தாளை கொடுத்து தேர்வு எழுதுமாறு கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற மாணவன் வேதனையில் தூக்கிட்டு செய்து கொண்டான். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.