
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ரம்பா. தற்போது சினிமாவிலிருந்து விலகி இருந்த நிலையில் மீண்டும் நடிக்க வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித்தா என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களோடு நடித்து வெற்றி படங்களை கொடுத்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல படங்களிலும் நடித்துள்ள இவர் தற்போது சில ரியாலிட்டி ஷோக்களின் நடுவராக பங்கேற்றுள்ளார். இவர் இலங்கை சேர்ந்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ரம்பா தன்னுடைய கணவருடன் சண்டை போட்டுவிட்டு பொருட்களை எல்லாம் பேக் செய்து கொண்டு ஃப்ளைட் டிக்கெட் புக் செய்து சென்னை திரும்பி விட்டதாக கூறியுள்ளார். பிளைட்டில் எறிய போது தான் என்னுடைய வீட்டிற்கு போன் செய்து நான் சென்னை வந்து விட்டேன் என்று சொன்னேன். அவர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள் . நான் சென்னை வந்ததும் என்னுடைய கணவரிடம் பேசவே இல்லை.
என்னுடைய அண்ணன் தான் அவரிடம் போன் செய்து நான் சென்னை வந்த விஷயத்தை சொன்னார். நான் இங்கு வந்தது தெரியாமல் அவர் கனடாவில் என்னை தேடிக் கொண்டிருந்தார். கோவத்தில் நான் சில தைரியமான முடிவுகளை எடுப்பேன். இல்லையென்றால் வீட்டிற்குள் பெட்டி பாம்பாக உட்கார்ந்து இருப்பேன் . ஆனால் கோபம் வந்துவிட்டால் என்னால் எதையும் செய்ய முடியும் என்று துணிச்சலாக கிளம்புவேன்’ என்று கூறியுள்ளார்.