நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். அப்பா ஒரு பிரபலம் என்றாலும் தனக்கு என்று தனி அடையாளம் பெற வேண்டும் என்று இவரும் சினிமாவில் நிறைய விஷயங்கள் செய்துள்ளார். கிராபிக்ஸ் துறையில் இவர் ஏரளமான சாதனைகள் செய்திருக்கிறார்.   இவர் கோவா என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்பட தயாரிப்பாளர் ஆனார் . அதன் பிறகு தன்னுடைய அப்பா ரஜினியின் கோச்சடையான் படம், தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இந்த நிலையில் இவர் நேற்று மதுரையில் உள்ள கள்ளழகர் கோவிலுக்கு சென்று உள்ளார். தன்னுடைய கணவர் விசாகனுடன் இணைந்து சாமி தரிசனம் செய்து மனமுருகி கள்ளழகரை பிரார்த்தனை செய்து வழிபட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.