வேலூர் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சபீனா பானு. இவர் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்கிறார். கடத்த ஒன்றரை ஆண்டுகளாக சபீனா பானு தனியார் ஷூ கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே கம்பெனியில் பணிபுரியும் சுரேஷ் என்பவருக்கும் சபீனா பானுவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதுகுறித்து சபீனாவின் பெற்றோர் அறிந்தனர். கடந்த 6 மாதங்களாக சுரேஷ் வேலைக்கு செல்லவில்லை. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக சபீனா பானு அவருடன் பேசாமல் இருந்துள்ளார். உடனே சுரேஷ் சபீனா பானுவை தொடர்பு கொண்டு பலமுறை தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தி உள்ளார். அதற்கு சபீனா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் சுரேஷ் சபீனா பானுவின் வீட்டிற்கு நேரில் சென்று ஏன் என்னிடம் இரண்டு மாதங்களாக பேசவில்லை. வேறு யாருடனாவது தொடர்பில் இருக்கிறாயா? என கேட்டு தகராறு செய்துள்ளார். உடனே சபீனா பானு இப்போது பேச வேண்டாம். எதுவாக இருந்தாலும் நாளை காலை பேசிக்கொள்ளலாம்.

இங்கிருந்து சென்று விடு என கூறியதால் கோபமடைந்த சுரேஷ் தான் மறைத்து கொண்டு வந்த இரும்பு ராடால் தாக்க முயன்றார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சபீனா பானுவின் தந்தை சிராஜுதீனும், தாய் ஆஜிராவும் அவரை தடுக்க முயன்றனர். இருவரையும் சுரேஷ் இரும்பு ராடால் தாக்கினார்.

அவரிடமிருந்து தப்பிப்பதற்காக சபீனா பானு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இருப்பினும் சுரேஷ் விடாமல் துரத்தி சென்று இரும்பராடால் சபீனா பானுவை கொடூரமாக கொலை செய்துவிட்டு தனது பைக்கில் தப்பி சென்றார். இதுகுறித்து தெரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பானுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த சபீனா பானுவின் பெற்றோரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது கொடுத்த புகாரின் பேரில் சுரேஷை கைது செய்வதற்காக போலீசார் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது அவர் தூக்கில் சுடலமாக தொங்கினார். சபீனா பானுவை கொலை செய்துவிட்டு அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.