
திருமணம் கடந்த உறவை தற்கொலைக்கு தூண்டும் குற்றமாக கருத முடியாது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் உறவு வைத்ததை எதிர்த்து கேட்ட தனது மகள் கணவரின் சித்திரவதை தாங்க முடியாமல் மன உளைச்சலில் தற்கொலை செய்ததாக பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதிகள் கணவரின் திருமணம் கடந்த உறவு மனைவியின் தற்கொலைக்கு தூண்டியதாகாது என கூறி அந்த நபருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.